போலீஸ் நிலையத்தில், காதல் திருமண ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில், காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தது.
தாமரைக்குளம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருமால்நல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்மதுரையின் மகன் பிரவீன்(வயது 23). அதே ஊரை சேர்ந்த மருதப்பனின் மகள் மகாலட்சுமி(19). இவர்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மகாலட்சுமி தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 16-ந் தேதி கும்பகோணம் அருகே சிவன் கோவிலில் பிரவீனும், மகாலட்சுமியும் திருமணம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து காதல் திருமண ஜோடி, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு தனது கணவருக்கு, தனது உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி, போலீசாரிடம் மகாலட்சுமி மனு அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story