பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி கேட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு வாகன ஓட்டிகள் சாலை மறியல்
ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பி கேட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
கொரோனா முழு ஊரடங்கின்போது திருவொற்றியூர் பகுதியில் தேவை இல்லாமல் வெளியில் சுற்றிய நபர்களை திருவொற்றியூர் போலீசார் மடக்கிப்பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 227 வாகனங்கள், திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களை திருப்பி கொடுங்கள் என்று கேட்டு திடீரென போலீஸ் நிலையம் முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததும் உடனடியாக வாகனங்களை ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story