மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை + "||" + Teen strangled to death due to prejudice

முன்விரோதம் காரணமாக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை

முன்விரோதம் காரணமாக இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
முன்விரோதம் காரணமாக புடவையால் இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்குன்றம்,

செங்குன்றம் காந்திநகர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மனைவி மோகனா(வயது35). அதே பகுதி ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்து வருகிறார்.


மோகனாவுக்கும், தாசுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

கழுத்தை நெரித்து கொலை

இந்தநிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாஸ், புடவையால் மோகனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார், கொலையான மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாசை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. தவறான ஊசியால் இளம்பெண் சாவு: சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும்
தவறான ஊசியால் இளம்பெண் சாவு: சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு.
3. அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் சாவு குழந்தை பெற்ற 3-வது நாளில் பரிதாபம்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நர்சு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4. அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் சாவு குழந்தை பெற்ற 3-வது நாளில் பரிதாபம்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நர்சு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5. தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம்பெண் சாவு
விராலிமலையில் மீனுக்கு இரைபோடும்போது, தெப்பகுளத்தில் தவறி விழுந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.