2 நாட்கள் ஊரடங்கில் தளர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 10 மணிக்கு மேல் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன
2 நாட்கள் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் 10 மணிக்கு மேல் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருவாரூர்,
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு 24-ந்தேதி வரை காலை 4 மணி வரை அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டும் காலை 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் எந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதனையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மேல் மூடப்பட்ட கடைகள் மதியத்திற்கு திறக்கவும், இன்று (ஞாயிற்றுகிழமை) முழுவதும் அனைத்து கடைகளும் திறக்கவும் அனுமதி அளித்திருந்தது.
மக்கள் கூட்டம் அலைமோதியது
அரசின் அறிவிப்பினை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை திறக்க தொடங்கினர். ஆனால் பலரும் ஊழியர்கள் பிரச்சினை போன்ற காரணங்களால் கடைகளை திறக்கவில்லை. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் படிப்படியாக அதிகரித்தது. கடைகள் முழுமையாக திறக்கப்படாததாலும், இன்று கடைகள் உண்டு என்பதால் கடைவீதியில் பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. நீண்ட நாட்கள் பிறகு எலக்ட்ரிசீயன், இரும்பு பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டதால் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருவாரூர் நகர் பகுதி நீண்ட நாட்கள் பிறகு பரபரப்பாக காணப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு எச்சரிக்கை செய்தனர்.
மன்னார்குடி
இதேபோல் மன்னார்குடி கடைத்தெருவில் அனைத்து கடைகளும் நேற்று மாலையில் திறக்கப்பட்டன. இதையடுத்து கடைத்தெருக்களில் பொதுமக்கள் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். நாளை முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பொருட்களை வாங்க கூட்டமாக நடுத்தெருவிற்கு படையெடுத்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நன்னிலம், கூத்தாநல்லூர்
நன்னிலம், கங்களாஞ்சேரி ஆகிய பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதி கடைவீதிகளில் நேற்று மாலையில் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி கடைவீதிகளில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க அப்பகுதி மக்கள் கடைகளில் கூடினர். இதனால் வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி சாலைகள் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Related Tags :
Next Story