மாமல்லபுரத்தில் கடல் அரிப்பால் 3 அடி உயர மணல் திட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தேவனேரி, வெண்புருஷம், நெம்மெலிகுப்பம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கரையை நோக்கி முன்னோக்கி வந்த ராட்சத அலையால் படிப்படியாக கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையில் உள்ள நிலப்பரப்பு பகுதியில் கடல் நீர் புக தொடங்கி உள்ளது.
இதனால் கரைப்பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடற்கரையில் மணல் திட்டு உருவாகி உள்ளது.
இது குறித்து மாமல்லபுரம் மீனவர்கள் கூறியதாவது:-
கடலில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கடல் நீரோட்டம் வடக்கு, தெற்கு என திசை மாறும்போது கடல் அரிப்பு ஏற்படும். ஒரு சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், முன்னோக்கி வருவதும் உண்டு. நீரோட்டம் மாறும் நேரத்தில் கரையில் மணல் திட்டு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story