திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,425 பேர் பாதிப்பு 36 பேர் உயிரிழந்தனர்


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,425 பேர் பாதிப்பு 36 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 26 May 2021 9:17 AM IST (Updated: 26 May 2021 9:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,425 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 36 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று 2-வது அலை தாக்கம் அதிகரித்து தினந்தோறும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 95 ஆயிரத்து 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 ஆயிரத்து 861 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

13 ஆயிரத்து 41 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,234 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக 36 பேர் இறந்துள்ளனர்.

Next Story