மூதாட்டி உள்பட 7 பேரின் உயிரை பறித்த கொரோனா


மூதாட்டி உள்பட 7 பேரின் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 26 May 2021 10:13 PM IST (Updated: 26 May 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மூதாட்டி உள்பட மேலும் 7 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி இறந்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலையில் சிக்கி தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மூதாட்டி உள்பட மேலும் 7 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி இறந்தனர். 

இதில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், ஏ.வெள்ளோட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி, சித்தையன்கோட்டையை சேர்ந்த 59 வயது பெண், பாரதிபுரம் மற்றும் பேகம்பூரை சேர்ந்த 67 வயது முதியவர்கள் என 6 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், திண்டுக்கல் மகாலட்சுமிநகரை சேர்ந்த 82 வயது முதியவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் இறந்தனர்.


இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 214 ஆக உயர்ந்தது. அதேநேரம் 423 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 

அந்த வகையில் இதுவரை 21 ஆயிரத்து 498 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story