திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளுக்கு 1,020 மூட்டை பிளீச்சிங் பவுடர் அனுப்பி வைப்பு


திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளுக்கு 1,020 மூட்டை பிளீச்சிங் பவுடர் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 26 May 2021 11:21 PM IST (Updated: 26 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளுக்கு 1,020 மூட்டை பிளீச்சிங் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பதை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கிராமங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளுக்காக திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 1,020 மூட்டைகள் பிளீச்சிங் பவுடர் வந்தது. இதனை ஒன்றியக்குழு தலைவர் தேவா பார்வையிட்டு ஊராட்சிகளுக்கு 30 மூட்டை வீதம் 34 ஊராட்சிகளுக்கு 1,020 மூட்டை பிளீச்சிங் பவுடரை அனுப்பி வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

கபசுர குடிநீர்

இதனிடையே அனைத்து ஊராட்சிகளிலும் கபசுர குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கைகளை கழுவுவதற்கு இலவசமாக சோப்பும் வழங்கப்பட்டது.

Next Story