காஞ்சீபுரத்தில் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஆய்வு


காஞ்சீபுரத்தில் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2021 12:43 AM GMT (Updated: 27 May 2021 12:43 AM GMT)

காஞ்சீபுரத்தில் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஆய்வு.

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று தடுப்பு பணிகளையும், ஆக்சிஜன் இருப்பு மற்றும் வினியோகத்தையும் கண்காணிக்க ஐகோர்ட்டு சிறப்பு பணி குழுக்களை நியமித்துள்ளது. சிறப்பு பணிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது காஞ்சீபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவவும் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் பிரிவை பார்வையிட்டதுடன் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து காஞ்சீபுரம் நகரில் உள்ள தாயார்குளம், வெள்ளகுளம் சுடுகாட்டுக்கு சென்று அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் தகனம் செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் வி.கே.பழனி ஆகியோரும் உடன் இருந்தனர்.

Next Story