உலகளாவிய டெண்டரில் கொரோனா தடுப்பூசி வழங்க 4 நிறுவனங்கள் விருப்பம்: மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே
மராட்டிய அரசு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் விட்டுள்ளது.
இந்த டெண்டருக்கு விருப்பம் தெரிவித்து உள்ள மருந்து நிறுவனங்கள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-
பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன், ஸ்புட்னிக், அஸ்டிரா ஜெனேகா ஆகிய 4 நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தங்களை விற்பனை ஏஜென்சிகள் மூலம் சமர்ப்பித்து உள்ளன. இதில் சில நிறுவனங்கள் விலையை குறிப்பிடவில்லை. சிலர் எப்போது மருந்து வழங்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தான் அவர்களிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம். தற்போது மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய நிறுவன மருந்துகளை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ளது. பைசர், மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு மருந்து இறக்குமதியில் தேசிய அளவில் சரியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story