சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது


சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 9:31 AM IST (Updated: 30 May 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரத்தில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது.

ஸ்ரீபெரும்புதூர்,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். சோதனையில் பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீஷ்குமார் (வயது 28) என்பதும், சுங்குவார்சத்திரம் பகுதியில் தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Next Story