ஸ்ரீபெரும்புதூர் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


ஸ்ரீபெரும்புதூர் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 May 2021 9:41 AM IST (Updated: 30 May 2021 9:41 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செடிப்பேடு-குத்தம்பாக்கம் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தூர்நாற்றம் விசுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

கொலையா?

உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story