ஊத்துக்கோட்டையில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை


ஊத்துக்கோட்டையில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 May 2021 11:25 AM IST (Updated: 30 May 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இந்த மாவட்டத்தில் இதுவரை 99 ஆயிரத்து 560 பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதில் 88 ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். தற்போது 9,499 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தொற்றிலிருந்து இருந்து மீள தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. மறுபுறம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Next Story