ஒரே நாளில் 1,200 பேருக்கு தடுப்பூசி: கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அதிரடியாக சரிந்த கொரோனா தொற்று


ஒரே நாளில் 1,200 பேருக்கு தடுப்பூசி: கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அதிரடியாக சரிந்த கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 May 2021 11:42 AM IST (Updated: 30 May 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 223 என்று உச்சக்கட்டத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றானது 76 என்ற எண்ணிக்கையில் குறைந்து வந்து உள்ளது.

இதற்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தாலுகா முழுவதும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருவதே காரணமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் முகாம்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ குழுவினருடன் சேர்ந்து சுகாதாரத்துறையினரும் தடுப்பூசியை போடும் பணியை இடைவிடாது செய்து வருகின்றனர்.

1,200 பேருக்கு தடுப்பூசி

அந்த வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் 1,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தெரிவித்து உள்ளார். மேலும், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசாரின் நடவடிக்கைகளால் தாலுகா முழுவதும் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் கொரோனா தொற்று அதிரடியாக குறைந்து உள்ளதற்கான காரணமாக கண்டறியப்பட்டு உள்ளது.

Next Story