செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு கலெக்டர் தகவல்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு 31-8-2021 வரை பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி முதல்வர் மூலமாக பொது டாக்டர் (எம்.பி.பி.எஸ்.), முதுநிலை மருத்துவ (நுரையீரல் நிபுணர்) தகுதி உடைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும். அதன்படி பொது டாக்டர் கல்வி தகுதியில் ரூ.60 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியம் மற்றும் முதுநிலை மருத்துவருக்கு (நுரையீரல் நிபுணர்) அரசு நிர்ணயித்த ஊதியத்தின் அடிப்படையில் என 90 மருத்துவ அலுவலர்களும் டி.ஜி.என்.எம், நர்சிங் என்ற கல்வித்தகுதியில் ரூ. 14 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியத்துடன் 64 நர்சுகளும், தகுதியின் அடிப்படையில் 50 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களும் அவசர மருத்துவ பணியாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ள நபர்கள் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி, செங்கல்பட்டு என்ற முகவரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ் (டாக்டர்களுக்கு மட்டும்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றுடன் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 9962533657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story