சோழவந்தான் பகுதியில் திடீர் மழை


சோழவந்தான் பகுதியில் திடீர் மழை
x
தினத்தந்தி 2 Jun 2021 1:30 AM IST (Updated: 2 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் பகுதியில் திடீர் மழை

சோழவந்தான்
சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலக்கால், ஊத்துக்குளி, தென்கரை, நாராயணபுரம், கச்சிராயிருப்பு, மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நெல் விளைந்து  அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை அருகிலுள்ள களத்தில் காயவைத்தனர். திடீரென்று கோடைமழை பெய்ததால் காயவைத்த நெல் மழையில் நனைந்து விட்டது.  இதை சற்றும் எதிர்பார்க்காத விவசாயிகள் மழையில் நனையதவாறு நெல்களை பாதுகாக்க முயன்றனர். இருந்தாலும் மழை தண்ணீரில் நெல் அடித்து சேதமடைந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  நல்ல விலைக்கு போகக் கூடிய நேரத்தில் கோடை மழையால் நெல் நனைந்து வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
தற்போது புதிதாக அமைந்துள்ள அரசு விவசாயிகள் மீது கருணை கொண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது இப்பகுதியில் நெல், வாழை போன்ற விவசாயம் செய்து வருகின்றோம். இதற்கு கடன் வாங்கி வேலை ஆட்கள் கிடைக்காமல் கூடுதலாக கூலி கொடுத்து விவசாய வேலையை செய்து வந்தோம். தற்போது நெல் நல்ல விளைச்சல் அதிக மகசூல் கொடுத்துள்ளது. 
இந்த நேரத்தில் கோடை மழை திடீரென்று பெய்ததால் களத்தில் காய வைத்த நெல் நனைந்து விட்டது. எனவோ நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story