மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 1:30 AM IST (Updated: 2 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 2 பேர் கைது

மதுரை
மதுரையில் ஊரடங்கு காலத்தில் திருட்டுத்தனமாக மது விற்பவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நகர் முழுவதும் ரோந்து சென்று மது விற்பவர்களை பிடித்து கைது செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பரங்குன்றம் ரோட்டில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட் வண்டியில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் தனக்கன்குளத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 28) என்பதும், அவர்கள் வண்டியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த மொபட் வண்டி, மதுபாட்டில்கள், 1100 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோன்று ஆனையூர் பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்த திருப்பதி(25) என்பரை பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story