கண்மாயில் சிக்கிய அரியவகை நெற்றிக்கண் மீன்
கண்மாயில் சிக்கிய அரியவகை நெற்றிக்கண் மீன்
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டியில் உள்ள ஒரு கண்மாயில் தேங்கி கிடந்த தண்ணீரில் சில சிறுவர்கள் மீன் பிடித்தனர். அப்போது அரியவகை மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனின் நெற்றியில் கண்கள் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்த ஊரை சேர்ந்த பரஞ்ஜோதி(வயது 50) என்பவர் கூறும்போது, பொதுவாக கிராமப்புற கண்மாய்களில் கெண்டை, குரவை, விரால், உழுவை, ஜிலேபி உள்ளிட்ட வகை மீன்கள்தான் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த அரிய வகை மீன் சிக்கியுள்ளது. இந்த மீனின் நெற்றியில் இரண்டு கண்களும், முதுகில் செதில்களும், வட்ட வட்ட புள்ளியாக சுமார் 250 கிராம் எடையுடன் காணப்பட்டது. மற்ற மீன்களை போல் இல்லாமல் இது வித்தியாசமாகவும் இருந்தது” என்றார். மேலும் அந்த மீனை அருகில் உள்ள ஒரு கிணற்றில் உயிரோடு விட்டனர்.
Related Tags :
Next Story