மருந்துக்கடைகளில் போதை தரும் மருந்துகளை தனிநபருக்கு விற்க கூடாது போலீசார் எச்சரிக்கை
மருந்துக்கடைகளில் போதை தரும் மருந்துகளை தனிநபருக்கு விற்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீசார் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருவாருர் மாவட்டத்தில் தடை உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்பட்டு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
அத்யாவசிய பொருட்களான மருந்து கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்க தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மதுபிரியர்கள், மது கிடைக்காத காரணத்தால் போதை தரும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மருந்்தகத்தில் வாங்கி உட்கொள்வதாக தகவல் வந்துள்ளது. எனவே முத்துப்பேட்டை உட்கோட்ட அனைத்து மருந்தகத்திலும் போதை தரும் மருந்துகளை தனிநபருக்கு விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டால் மட்டுமே இ்ந்த வகை மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முத்துப்பேட்டை போலீஸ் உட்கோட்டகத்துக்கு உட்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story