ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பலியானார்.
மதுரை, ஜூன்
சமயநல்லூர்-சோழவந்தான் ரெயில் பாதையில் தேனூர் ரெயில்வே கேட் அருகே நேற்று ஒரு முதியவர் ரெயிலில் அடிபட்டு கிடந்தார். இது குறித்து, தகவலறிந்த மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நபருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் மஞ்சள் நிறத்தில் கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story