மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
சோழவந்தான்,ஜூன்
சோழவந்தான் அருகே திருவேடகம் பக்கம் உள்ள சீரடி சாய்பாபா கோவில் அருகே சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற சதீஷ்குமார் (வயது 24), சிறுவாலை அருகே செல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுகேஷ் (24) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 மோட்டார்சைக்கிள்களை மீட்டனர்.
Related Tags :
Next Story