மராட்டியத்தில் தற்போதைய குற்ற நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மராட்டியத்தில் தற்போதைய குற்ற நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2021 3:23 PM IST (Updated: 3 Jun 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சிறைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால், பல கைதிகள் தற்காலிக பரோலில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் சிறைகளில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பது குறித்து தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா, நீதிபதி குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அரசின் அட்வகேட் ஜெனரல் பதிலளிக்கையில், ‘‘ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று உயர்மட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தகுதியுள்ள கைதிகள் 2 ஆயிரத்து 168 பேர் கடந்த 2 மாதங்களில் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் புதிய கைதுகள் மூலம் சிறைகளில் நெரிசலை தவிர்க்க முடியவில்லை’’ என்று கூறினார்.

இதைத்தொர்ந்து கொரோனா காலத்தில் வழக்குப்பதிவு, கைதானவர்களின் எண்ணிக்கை, தற்போதைய குற்ற நிலவரம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story