ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தடுப்பு சாதனங்கள்


ஆயிரம் போலீசாருக்கு கொரோனா  தடுப்பு சாதனங்கள்
x
தினத்தந்தி 4 Jun 2021 1:37 AM IST (Updated: 4 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் ஆயிரம் போலீசாருக்கு கொரோனா நோய் தடுப்பு சாதனங்களை தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார்.

மதுரை, ஜூன்.4-
மதுரை மாவட்டத்தில் ஆயிரம் போலீசாருக்கு கொரோனா நோய் தடுப்பு சாதனங்களை தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆலோசனையின் பேரில் தென்மண்டல காவல் துறையினர் அரசின் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இரவு-பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். 
முன்கள பணியாளர்களாக காவல் துறையினர் பணியாற்றுவதால் இந்த பெருந்தொற்று நோயால் காவலர்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பெருந்தொற்றில் இருந்து காவலர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு சாதனங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கோபிகிருஷ்ணன் முன்னிலையில், தென் மண்டல ஐ.ஜி. அன்பு, காவலர்களுக்கு நோய் தடுப்பு சாதனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் காவலர்கள் கலந்துகொண்டு நோய் தடுப்பு சாதனங்களை பெற்றுக்கொண்டனர்.
இரட்டை முகக் கவசம்
இதனைத் தொடர்ந்து தென் மண்டல ஐ.ஜி. அன்பு கூறுகையில், முன்கள பணியாளர்களாக இந்த பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் காவல் துறையினர் அரசின் வழிகாட்டுதல் படி தாங்கள் பணி செய்யும் இடங்களில் இரட்டை முகக் கவசம் அணியவேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது என பல்வேறு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். 
இது போல் நோய் தொற்று தங்களுக்கும், தங்களால் தங்களது குடும்பத்திற்கும் தொற்று ஏற்படாவண்ணம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story