டிராக்டர் கவிழ்ந்து விபத்து
டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாவாசி. இவர் தோட்டத்தில் கரும்பு நடவு செய்வதற்காக தனது டிராக்டர் மூலம் நல்லுத்தேவன் பட்டி பின்னத்தேவன் என்பவரது தோட்டத்திற்கு சென்று கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு ஏ.புதுப்பட்டி சென்று கொண்டிருந்தார். டிராக்டர் உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பாக வரும் போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் அம்மாவாசி மற்றும் உடன் வந்த 2 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து எந்திரம் மூலம் சாலையில் கிடந்த டிராக்டரை அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story