திருநகர், ஹார்விப்பட்டி தெருக்கள் அடைப்பு


திருநகர், ஹார்விப்பட்டி தெருக்கள் அடைப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 3:08 AM IST (Updated: 4 Jun 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் 9 பேர் பாதிப்பால் திருநகர், ஹார்விப்பட்டி தெருக்கள் அடைக்கப்பட்டன.

திருப்பரங்குன்றம், 
 மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கு உட்பட்ட திருநகரில் உள்ள பாரதியார்தெரு, காந்தி தெருவில் ஒரே வீட்டில் 6 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல ஹார்விப்பட்டி பகுதியிலும் ஒரே வீட்டில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அந்த பகுதியை சுகாதார துறையினர் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பாது காக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட தெருக் களில் அடைப்பு ஏற்படுத்தி தடை உருவாக்கி உள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் திருநகர், ஹார்விப்பட்டி பகுதியில் இதுவரை கிருமிநாசினி தெளிக் கப்படாத நிலை இருந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story