திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 6:21 AM IST (Updated: 5 Jun 2021 6:21 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புளியரன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ஸ்டீபன்ராஜ் (வயது 20). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 19 வயது பெண்ணை காதலித்து வந்தார். ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த ஸ்டீபன்ராஜ் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

கைது

இது குறித்து அந்த பெண் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் அஞ்சாலாட்சி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து செய்யூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தார்.
1 More update

Next Story