காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2021 6:23 AM IST (Updated: 5 Jun 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று 2-வது் அலை காரணமாக தற்போதைய சூழலில் நோய் தொற்று அதிகரித்து வருவதும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவிற்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளதை அறிந்து கொண்ட பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்ததையடுத்து தற்போது மீண்டும் மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 5 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story