மதுரையில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு
மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். 478 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். 478 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது. இதுபோல் மதுரையிலும் நோய் தொற்று குறைந்து வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 468 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப் பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளில் 468 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் மதுரையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. இது போல் நேற்று ஒரே நாளில் 981 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 944 ஆக உள்ளது. இது போல் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 12,612 ஆக குறைந்துள்ளது.
12 பேர் உயிரிழப்பு
மதுரையில் பாதிப்புகள் குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. அதன்படி நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்கள் 58, 54, 55 வயது ஆண்கள். 87, 76, 66, 82, 70, 81 வயது முதியவர்கள். 55, 53 வயது பெண்கள், 83 வயது மூதாட்டி என 12 பேர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது.
கருப்பு பூஞ்சை
கொரோனா நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்த வர்களுக்கு புதிதாக கருப்பு பூஞ்சை நோய்தொற்று உறுதியாகி வருகிறது. அதன்படி மதுரையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றில் இருந்து நோயாளிகளை காக்கும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 60 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story