புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் தற்போது 8,270 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 470 பேருக்கும், காரைக்காலில் 136 பேருக்கும், ஏனாமில் 15 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,079 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,628 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,181 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 8,270 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story