அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்
அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து, லட்சக்கணக்கானவர்களை பாதிப்பில் இருந்து மீட்டு நலம்பெற்றதில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இதை கருத்தில் கொண்டு அமெரிக்கா நாட்டின் சீயாட்டல் தமிழ்ச்சங்கம் சார்பில் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவிற்கு உயிர்காக்கும் மருந்துகள் , பதப்படுத்த குளிர்சாதன பெட்டிகள், நகரும் திரை, பிரின்டர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கினர்.
இதை சங்கத்தின் சார்பாக மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் வழங்கினார். தோப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர். கொரோனா 2-வது அலை பேரிடரை சமாளிக்க பல்வேறு நலதிட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிலையில் அரசுக்கு உறுதுணையாக வெளிநாடுகளில் செயல்படும் உலக தமிழ்ச்சங்கங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு உதவிகரம் புரிவது அனைவரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story