காஞ்சீபுரம் கொரோனா சித்த மருத்துவ மையத்தில் 20 நாளில் 194 பேர் குணமடைந்தனர்


காஞ்சீபுரம் கொரோனா சித்த மருத்துவ மையத்தில் 20 நாளில் 194 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 7 Jun 2021 6:20 AM IST (Updated: 7 Jun 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கொரோனா சித்த மருத்துவ மையத்தில் 20 நாளில் 194 பேர் குணமடைந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கடந்த மே மாதம் 17-ந்தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டது.

மையம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 232 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 194 பேர் 20 நாட்களில் குணமடைந்து விட்ட னர். எஞ்சிய 38 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் மஞ்சள்பொடி, உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை தேநீர், எட்டு வடிவ நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், வர்மம் மற்றும் கைவிரல்களால் நோயை குணப்படுத்தகூடிய முத்திரை பயிற்சிகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது.

மாலையில் சுவையின்மை குறைவை போக்க ஓமப்பொட்டலம் நுகர்தல், தேன் கலந்த ஆரோக்கிய பானம், 3 வேளையும் உணவு, நெல்லிச்சாறு போன்றவையும் வழங்கப்படுகிறது. குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கும் நெல்லிக்காய் லேகியம், உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரண மாத்திரை போன்றவை அடங்கிய மருந்து பெட்டகமும் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Next Story