செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 832 பேர் பாதிப்பு 21 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 832 பேர் பாதிப்பு 21 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 6:32 AM IST (Updated: 7 Jun 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 832 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 832 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 374-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 231 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2079-ஆக உயர்ந்தது. இதில் 7 ஆயிரத்து 64 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 352 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 2-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 61 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1045- ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 168 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story