கொரோனா 3 வது அலைக்கு ஆயத்தம்


கொரோனா 3 வது அலைக்கு ஆயத்தம்
x
தினத்தந்தி 7 Jun 2021 2:03 PM GMT (Updated: 7 Jun 2021 2:03 PM GMT)

பொதுமக்கள் சாலைகளில் திரண்டு வருவதால் கொரோனா 3-வது அலைக்கு ஆயத்தமாகும் நிலை உருவாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கில் கட்டுப்பாடுடன் இருந்த பொதுமக்கள் தளர்வு அறிக்கப்பட்டதும் சாலைகளில் புற்றீசல்போல வலம்வர தொடங்கி உள்ளனர். இதனால் மதுரை தமிழ்ச்சங்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தளர்வை சாதகமாக்கினால் கொரோனா 3-வது அலைக்கு ஆயத்தமாகி விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து சமூக இடைவெளியை கடை பிடித்து கூட்டம், கும்பலை தவிர்க்கவேண்டும். முன்னெச்சரிக்கையை கடைபிடிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story