தீக்குளித்த பெண் சாவு


தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:12 PM IST (Updated: 7 Jun 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகமலைபுதுக்கோட்டை, 
நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 36). இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் வடபழஞ்சியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவரை 2-வத திருமணம் செய்து பல்கலை நகரில் வசித்து வந்தார். லாரி டிரைவரான ஜெயபாண்டி குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஊரடங்கின் போது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பரமேசுவரி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கா சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story