சிறப்பு முகாம் மூலம் கோயம்பேடு மார்க்கெட்டில் 6,340 பேருக்கு கொரோனா தடுப்பூசி; சென்னை மாநகராட்சி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கோயம்பேடு வணிக வளாகம் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மொத்த வியாபாரத்துக்காக மட்டும் செயல்பட்டு வருகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் விற்பனை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி வளாகங்களில் மொத்த மீன் விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள
நிலையில் அங்கு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை வியாபாரிகள் 6,340 பேருக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் வியாபாரிகள் 1,234 பேருக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 பேருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் வியாபாரிகளுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story