திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 436 பேர் பாதிப்பு
தமிழக அரசு கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 99 ஆயிரத்து 619 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,518 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 15 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story