நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 12:34 AM IST (Updated: 9 Jun 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

திருமங்கலம்,
கள்ளிக்குடி அருகே உள்ள கொக்கலாச்சேரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி ஜெயந்தி (வயது 49). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை ஜெயந்தி வழக்கம் போல் நடைபயிற்சி சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர்.
ஜெயந்தி கொள்ளையர்களுடன் போராடி சண்டையிட்டதில் 2 பவுன் சங்கிலி கொள்ளையர்களிடம் சிக்கியது. அந்த நகையுடன் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story