டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம்


டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:56 AM IST (Updated: 9 Jun 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சோழவந்தான்,ஜூன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதிராமலிங்கம் மற்றும் போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி. சங்க நிர்வாகி சப்பாணி உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் குருவித்துறை, மன்னாடிமங்கலம், கண்ணுடையாள்புரம் ஆகிய கிராமங்களிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் ஜெயக்கொடி, ஒன்றிய செயலாளர் தவமணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆசைராஜ், நாகராஜ் உள்பட கட்சியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story