பஞ்சு மில்லில் திடீர் தீ
பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
திருமங்கலம்,ஜூன்.
திருமங்கலம் அருகே மேலக்கோட்டை விலக்குப் பகுதியில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு மில் உள்ளது. வழக்கம் போல் நேற்று காலை தொழிலாளர்கள் பஞ்சுகளை தரம் பிரித்து அவற்றை உலர வைத்துக்கொண்டிருந்தனர். திடீரென மின் கசிவு காரணமாக பஞ்சில் தீப்பிடித்து தீ மளமளவென எரிந்தது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமாகின. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story