நீர்வரத்து கால்வாயில் மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு


நீர்வரத்து கால்வாயில் மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jun 2021 5:39 PM GMT (Updated: 9 Jun 2021 5:39 PM GMT)

தேவகோட்டை அருகே நீர்வரத்து கால்வாயில் மணல் திருடியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேவகோட்டை.


தேவகோட்டை தாலுகா சருகணி உள்வட்டம் ஒரசூர் கிராம கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாயில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவதாக தேவகோட்டை கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர். அது பற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னகுமார் திருவேகம்பத்து போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் அருகே உள்ள முத்தனங்கோட்டையை சேர்ந்த ரகுபதி, புதுகுறிச்சி விஜய் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story