மாவட்ட செய்திகள்

3-வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் + "||" + Stop vaccination on the 3rd day

3-வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

3-வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்
3வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகிறது.
மதுரை,ஜூன்.
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பு இ்ல்லை. இதனால் கடந்த 2 தினங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற வில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்றும் தடுப்பூசிகள் வந்து சேராததால் 3-வது நாளாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.