மாவட்ட செய்திகள்

துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி + "||" + Woman electrocuted while washing clothes

துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி

துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் ஜெகன்குமார். ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி பைரவி (வயது 34). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.


நேற்று மதியம் பைரவி தனது வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் மற்றும் மகன்கள் இருவரும் வீட்டின் உள்ளே இருந்தனர்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அருகே உள்ள மின்சார மோட்டாரில் இருந்த வயரில் எதிர்பாராதவிதமாக பைரவியின் கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் ஜெகன்குமார் மற்றும் மகன்கள் ஓடி வந்து பார்த்தனர்.

பின்னர் பேச்சு மூச்சு இன்றி கிடந்த பைரவியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பைரவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மீது போலீஸ் வேன் மோதி கணவன்- மனைவி பலி
போலீஸ் வேன், கார் மீது மோதியதில் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற கணவன்- மனைவி பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
2. விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.
3. கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.
4. விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
5. காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.