புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 3:20 PM GMT (Updated: 10 Jun 2021 3:20 PM GMT)

புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதுகுளத்தூர், 
 தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் முதுகுளத்தூர் பகுதிகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவிக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முதுகுளத்தூர் கிழக்கு தெரு பஸ் ஸ்டாப் அருகே புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த பரமக்குடியை சேர்ந்த சிவராமன், பாபு, சரவணன், ராம்பாபு மற்றும் கீழகுளத்தை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 203 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Next Story