டி.வி., வெள்ளி பொருட்கள் திருட்டு
டி.வி., வெள்ளி பொருட்கள் திருட்டு
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் ஆபிஸ் தெருவில் குடியிருந்து வருபவர் முருகன். இவரது மனைவி மைதிலி (வயது 64). இவர் கடந்த 28-ந் தேதி உடல் நிலை சரியில்லாதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது டி.வி, வெள்ளி குத்துவிளக்கு, குங்கும சிமிழ் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story