நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2021 5:35 PM IST (Updated: 13 Jun 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகூர்,

நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், நாகை அண்ணாசிலை கிணத்தடி சந்து பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 42),அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கம் மகன் செந்தில்குமார் (30) என்பதும், இவர்கள் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

‌இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த அகர ஓரத்தூர் சிக்கல் ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முத்தரசன் (26), தலைஞாயிறு சந்தான தெருவை சேர்ந்த ஜெயகுமார் மகன் செல்வகுமார் (32), தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை நரியம்பாளையத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் தினேஷ்குமார் (29), நாகை காடம்பாடி சூரியா நகரை சேர்ந்த ஹரிலூயிஸ் மகன் ஜபராஜ் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது

நாகூர் - திட்டச்சேரி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், திருத்துறைப்பூண்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கபிலன் (20), தேவூர் ராதா மங்களத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் பால்ராஜ் (28), ஆழியூர் மெயின் ரோட்டை சேர்ந்த குமார் (43), வேதாரண்யம் கள்ளிமேடு தாமரை குளத்தை சேர்ந்த முருகையன் மகன் காளிதாஸ் (36) என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

திட்டச்சேரி

திட்டச்சேரியில் காரைக்காலில் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழ்வேளூர் அருகே நீலப்பாடி ராதாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் பிரதீப் (23), திருவாரூர் மாவட்டம் கருப்பூர் காலனி தெருவை சேர்ந்த மணி மகன் விஜய் (22), திருக்கண்ணபுரம் சின்னையன் தோப்பை சேர்ந்்த ராஜேந்திரன் மகன் விவேக் (22) ஆகிய 3 பேரையும் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூரில் 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திய திருவாரூர் மாவட்டம் மருவத்தூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிகண்டன் (32), வேதாரண்யம், மறைஞாயநல்லூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் ஆனந்தன் (23) ஆகிய 2 பேரையும் கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story