மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல் + "||" + First-Minister may apply for the State Youth Award Collector Kirankurala Information

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கிரண்குராலா தகவல்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுபத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2021-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15-08-2021 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே இந்த விருதுகள் பெறுவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை வருகிற 30-ந்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2021 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2021 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். மேலும் கடந்த 2020-2021 நிதியாண்டில் 01.04.2020 முதல் 31.03.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டு செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்க இயலாது. மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
2. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
3. 67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்.
4. நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது மாமல்லபுரம் போலீசார் தகவல்
நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டதாக மாமல்லபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
5. கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.