சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 8:20 AM IST (Updated: 14 Jun 2021 8:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக கொறடாவை தேர்வு செய்வது, எதிர்க்கட்சி துணைத்தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

அதேபோல், புதிய ஆட்சி அமைந்ததற்கு பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி நடைபெற இருப்பதால் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால் அரசியல் களம் மீண்டும் பரபரப்படைய தொடங்கியிருக்கிறது. இந்த விவகாரமும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story