மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை


மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை
x
தினத்தந்தி 14 Jun 2021 4:32 PM IST (Updated: 14 Jun 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

மேல வாஞ்சூர் சோதனை சாவடியில்போலீசார் வாகன சோதனை.

நாகூர்,

கொரோனா வைரசை கட்டுபடுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி முதல் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் மது கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாராயம் மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவம் ஆகிய அளவில் நடைபெற வாய்ப்பு உள்ளதை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story