கொரோனா தடுப்பூசி முகாம்
வடபுதுப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
பெரியகுளம்:
பெரியகுளம் ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் உள்ள முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தங்கவேல், வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தனர்.
தேனி நகர தி.மு.க.செயலாளர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் உலகநாதன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவா, வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமில் வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து வரிசையாக நின்று பாதுகாப்புடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story