சுபநிகழ்ச்சிகளின் விவரங்களை தெரிவிக்க ஓட்டல், கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு


சுபநிகழ்ச்சிகளின் விவரங்களை தெரிவிக்க ஓட்டல், கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 17 Jun 2021 9:17 AM IST (Updated: 17 Jun 2021 9:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக்கூடங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அம்மா மாளிகையில் நடந்தது.

கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளுதல், முக வசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வருகின்றன.எனவே, ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக்கூடங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/marraiagehall/ என்ற மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும்.மேலும், திருமண நிகழ்ச்சிகளில் 
கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினியை நுழைவுவாயிலில் வைத்து கைகளை சுத்த செய்ய வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் 
வலியுறுத்த வேண்டும்.இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் எம்.எல்.பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story